Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நன்றி கெட்ட விஜயகாந்த்: ஆவேச அதிமுக!

நன்றி கெட்ட விஜயகாந்த்: ஆவேச அதிமுக!

நன்றி கெட்ட விஜயகாந்த்: ஆவேச அதிமுக!
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (10:10 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 3 வார காலத்துக்கும் மேலாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், பிரபலங்கள் என பலர் அப்பல்லோ மருத்துவமனை வந்து அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் விசாரித்து செல்கின்றனர்.
 
திமுக பொருளாளர் ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நேரடியாக மருத்துவமனை வந்து விசாரித்தனர். திமுக தலைவர் கருணாநிதி மன்பூர்வமாக முதல்வர் குணமடைய வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
 
காங்கிரஸ் தேசிய துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல் திருமாவளவன், மற்ற மக்கள் நல கூட்டணி தலைவர் என பல எதிர்கட்சி தலைவர்களும் பகைமையை மறந்து அரசியல் நாகரிகத்துடன் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
 
அதுமட்டுமில்லாமல், மற்ற மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், பிரபலங்கள் என பலர் மருத்துவமனை வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டு சென்றனர். ஆனால் முன்னதாக அதிமுக உடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர் கட்சி அந்தஸ்தை பெற்று பின்னர் எதிர் கட்சியாக முட்டி மோதிய தேமுதிக சார்பில் யாரும் வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவமனைக்கு வந்து விசாரிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து பதில் அளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமார், அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசியல் நாகரிகத்துடன் அம்மாவின் உடல் நலம் குறித்து அமைச்சர்களிடம் வந்து நலம் விசாரிக்கின்றனர்.
 
தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து பல தோல்விகளை கண்ட விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் 29 எம்.எல்.ஏ.கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று, கட்சிக்கு ஒரு அங்கீகாரமே கிடைத்தது. இருப்பினும் அவர் வந்து உடல் நலம் விசாரிக்கவில்லை என்ற கவலை, எங்கள் கட்சியினர் யாருக்கும் துளிகூட இல்லை. ஆனால் அவர் ஒரு நன்று கெட்டவர் என்பது இதன்மூலம் உணந்து கொள்ளலாம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடி போதையில் ஜெயலலிதாவின் உடல் நிலையை விமர்சித்த திமுக தொண்டருக்கு அடி உதை!