Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? கசிந்த தகவல்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (22:41 IST)
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தலைமை ஏற்கனவே குழு அமைத்துள்ள நிலையில் அந்த குழு பல்வேறு கட்சிகளிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழகம், புதுவை என மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20, பாஜக 10, பாமக 5, தேமுதிக 4 , புதிய தமிழகம்1 என்கிற அளவில்,  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து எந்தெந்த தொகுதிகள் எந்த கட்சிகளுக்கு என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தம்பித்துரை எம்பி உள்ளிட்ட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments