அதிமுக எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம்: என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (10:24 IST)
புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முதலில் வளையமாதேவி கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தற்போது புவனகிரி எம்எல்ஏ அலுவலக முன் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments