பாறையில் ஏறி நின்று செல்பி.. ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி பலி.!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (10:14 IST)
ஆற்றின் அருகே பாறையில் ஏறி நின்று புதுமண தம்பதிகள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சித்திக் மற்றும் நவுபியா தம்பதிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள ஆற்றின் அருகே சென்று பாறையில் ஏறி நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். 
 
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இருவரும் பாறையில் இருந்து தவறி விழுந்து நிலையில் ஆற்று தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த தம்பதியை காப்பாற்ற உறவினர்கள் முயன்றும்  முடியவில்லை 
 
இந்த சம்பவத்தில் ஆற்றில் விழுந்த சித்திக் நவுபியா தம்பதிகள் மற்றும் காப்பாற்ற முயன்ற உறவினர் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் செல்பி மோகம் காரணமாக விலை மதிப்புள்ள உயிர்கள் இழக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments