Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்… அதிமுக போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (10:53 IST)
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய்  உடனடியாக வழங்கவேண்டும் என அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதில் ‘திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதிமுக சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments