தொடர் தோல்விக்கு பிறகு 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் அதிமுக, பிரசாந்த் கிஷோர் அணுகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோரை திமுக அணுகியது என்பதும் சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்று தான் திமுக தேர்தல் ஜெயித்தது என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள் என்றும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பல கட்சிகளை நோக்கி சென்றுவிடும் ஆபத்து இருப்பதாகவும் அரசியல் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரை அதிமுக அணுகியிருப்பதாகவும், தேர்தலில் வியூகம் அமைத்து கொடுப்பது குறித்த ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திமுகவுக்கு போலவே அதிமுகவுக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து அக்கட்சியை ஆளுங்கட்சியாக பிரசாந்த் கிஷோர் மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.