Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

CAA ஆதரவு பேரணி: தல காட்டாத அதிமுக அண்ட் பாமக!!

CAA ஆதரவு பேரணி: தல காட்டாத அதிமுக அண்ட் பாமக!!
, புதன், 8 ஜனவரி 2020 (18:45 IST)
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து பாஜகவினர் நடத்திய பேரணியில் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக கலந்துக்கொள்ளவில்லை.
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.    
 
எனவே, இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டுள்ளது. 
 
அந்த வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். இதுவரை இரண்டு முறை ஆதரவு பேரணி நடைப்பெற்றுள்ள நிலையில் இதில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாமக கலந்துக்கொள்ளவில்லை. 
 
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததோடு சரி அதன் பின்னர் இவ்விரு கட்சிகளும் குடியுரிமை சட்ட விவகாரத்தில் பெரிதாக ஈடுபாடுடன் இருக்கவில்லை. 
 
இப்படி இருக்கும்போதேதான் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக குறைவான இடங்களை கைப்பற்றியதற்கு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதே காரணம் என கூறப்பட்டு வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து... பிரபல நடிகை விளக்கம் !