அ.தி.மு.க. - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியால் பாமக அதிருப்தி!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (21:18 IST)
அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் பெற்ற நிலையில் பாமக தனது விருப்பத்திற்குரிய தொகுதிகளாக கொடுத்த பட்டியலில் புதுச்சேரியும் உள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் பாமக போட்டியிட்டுள்ளதால் அந்த தொகுதியை அதிமுகவிடம் இருந்து பெற்றுவிட வேண்டும் என்பதே அக்கட்சியின் எண்ணமாக இருந்தது
 
ஆனால் சற்றுமுன் அதிமுகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து புதுச்சேரி தொகுதியை பெற்றுவிட்டது. இதனால் பாமக தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஏழு தொகுதியும் அதைவிட ஒரு மாநிலங்களவை தொகுதியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தனது ஆதங்கத்தை வெளியே சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக பாமக வட்டாரங்கள் கூறுகின்றன
 
ஏற்கனவே புதுச்சேரி தொகுதியை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளதால் தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நேரடி போட்டி என்பது உறுதியாகிவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments