Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி செழிக்க அதிமுக - தேமுதிக மியூட்சுவல் டீலிங்?

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (14:15 IST)
அதிமுக - தேமுதிக கூட்டணி நல்லபடியாக தொடர இரு கட்சிகளும் வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளன. 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரையும் பற்றியும் அவரது அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியவர்களில் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். 
 
இதனால் அவர் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்ப்பில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒருசில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு ஒருசில வழக்குகள் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. 
 
இந்நிலையில் தேமுதிக மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு முன்னர் தேமுதிக அரசு மீது தொடுத்திருந்து 24 வழக்குகளையும் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது அதிமுகவுடன் தேமுதிக தோழமை கட்சியாக இருப்பதால் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதே போல கூட்டணி ஆதாயத்திற்காக தேமுதிகவும் வழக்குகளை வாபஸ் வாங்கி இருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments