15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

Mahendran
செவ்வாய், 17 ஜூன் 2025 (11:01 IST)
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் நடந்த காதல் திருமண தகராறு தொடர்பான சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்ததாக, தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கம். அதன்படி, தமிழக உள்துறை செயலாளர், ஏடிஜிபி ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, ஜெயராம் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்