ஆஸ்திரியவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்த போது, தனது பாஸ்போர்ட்டை பறிகொடுத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை வித்யூலேகா தற்காலிக பாஸ்போர்ட் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.
நீதானே என் பொன் வசந்தம், வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் வித்யூலேகா. இவர் நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.
நடிகை வித்யுலேகா தனது நண்பர்களுடன் ஆஸ்திரியாவிற்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்தார். வியன்னா நகரில் ஒரு ஹோட்டலில் அனைவரும் தங்கியிருந்தனர். அப்போது ஒருவன் ஒரு சீட்டை காட்டி, இந்த முகவரி எங்கிருக்கிறது?என்று கேட்டுள்ளான். வித்யூலேகா அதை படித்துக் கொண்டிருந்த போது, மற்றொருவன் அவரின் பேகை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
வித்யூலேகாவும், அவரது தோழிகளும் சத்தம் போட்டுள்ளனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
அந்த பையில்தான் அவரின் பாஸ்போர்ட், கிரெடிக், டெபிட் கார்டுகள் மற்றும் பணம் ஆகியவை இருந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று திகைத்த வித்யுலேகா, ஆஸ்திரியா போலீசாரிடமும் புகார் கொடுத்தார். இந்திய தூதரகத்திலும் உதவி கேட்டிருந்தார்.
மேலும், டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் உதவி கேட்டார். பாஸ்போர்ட் இல்லாமல் அவர் இந்தியா திரும்ப முடியாது நிலை இருந்தது.
இந்நிலையில், இந்திய தூதரகம் அவருக்கு தற்காலிகமாக ஒரு புதிய பாஸ்போர்ட்டை வழங்கியது. அதன் மூலம் அவர் நேற்று காலை டெல்லி வந்தார். அதன்பின் மாலை சென்னை திரும்பினார்.