Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த்ரிஷாவை டுவிட்டரை விட்டு விரட்டிய ஜல்லிக்கட்டு!

த்ரிஷாவை டுவிட்டரை விட்டு விரட்டிய ஜல்லிக்கட்டு!

Advertiesment
த்ரிஷாவை டுவிட்டரை விட்டு விரட்டிய ஜல்லிக்கட்டு!
, ஞாயிறு, 15 ஜனவரி 2017 (11:41 IST)
ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய பீட்டா அமைப்பின் தூதுவராக இருக்கும் நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.


 
 
நடிகை த்ரிஷா கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு படப்பிடிப்பை நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவர் மரணமடைந்து விட்டதாக போஸ்டர் உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி விட்டனர்.
 
இதனால் கோபமான நடிகை த்ரிஷா அதற்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தான் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எங்கும் பேசவில்லை என விளக்கம் அளித்தார். அதன் பின்னர் நான் ஒரு தமிழன். நான் பீட்டாவை ஆதரிக்கிறேன். எவ்வளவு பழமையான பாரம்பரியமாக இருந்தாலும் மிருகங்கள் வதைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என த்ரிஷா மற்றொரு டுவீட் செய்திருந்தார்.
 
பின்னர் தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் த்ரிஷா. இந்நிலையில் த்ரிஷா தனது டுவிட்டர் கணக்கை தற்காலிகமாக மூடும் அளவிற்கே வந்துவிட்டார். தற்போது அவரது கணக்கு டி-ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பன்னீர்செல்வத்தை போனில் அழைத்து வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!