Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌதமியை தொடர்ந்து நடிகை சீதா: லிவிங் டூ கெதருக்கு டாட்டா!

கௌதமியை தொடர்ந்து நடிகை சீதா: லிவிங் டூ கெதருக்கு டாட்டா!

கௌதமியை தொடர்ந்து நடிகை சீதா: லிவிங் டூ கெதருக்கு டாட்டா!
, சனி, 5 நவம்பர் 2016 (12:45 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்ன நடிகை கௌதமி நடிகர் கமலை பிரிவதாக அறிவித்தார். இது முக்கிய செய்தியாக இடம்பெற்று சமூக வலைதளங்காளில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.


 
 
கணவரை விவாகரத்து செய்த நடிகை கௌதமி பின்னர் நடிகர் கமலுடன் லிவிங் டூ கெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் மகளின் எதிர்காலம் கருதி கமலை விட்டு பிரிவதாக கூறினார்.
 
இந்நிலையில் மற்றொரு நடிகையான சீதாவும் தன்னுடைய லிவிங் டூ கெதர் வாழ்க்கைக்கு டாட்டா காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை சீதா இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
 
இந்நிலையில் நடிகை சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தனது வீட்டில் இருந்து நேற்று முந்தினம் வெளியேற்றிய சீதா தங்களுடைய லிவிங் டூ கெதர் வாழ்க்கைக்கு பை பை சொன்னதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

96 ரூபாயில் ஆன்லைனில் பான்கார்ட்!! எப்படி பெறுவது?