Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ரம்பா அஞ்சலி..! பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்..!!

rumba

Senthil Velan

, திங்கள், 5 பிப்ரவரி 2024 (16:07 IST)
திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு, பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
 
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
webdunia
இந்நிலையில் திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர்  தங்கள் குடும்பத்தினருடன் வந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதை அடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்குடியினரை வெறுக்கும் மத்திய அரசு..! அரசியலில் இருந்து விலக தயார்..! பாஜகவுக்கு ஹேமந்த் சோரன் சவால்..!!