Publish Date: Fri, 12 Nov 2021 (08:35 IST)
Updated Date: Fri, 12 Nov 2021 (08:37 IST)
பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!
பிரபல மலையாள நடிகை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா. 74 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 500க்கும் அதிகமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் இயக்குனர் பரதனின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் உடல்நலம் காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லலிதா அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது கல்லீரல் பிரச்சினை இருப்பதாகவும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன