Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை: நடிகையின் விளக்கம்!

Advertiesment
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்கொலை: நடிகையின் விளக்கம்!
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (08:15 IST)
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த லாரி அதிபரான நாகப்பனுக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.



 


பின் அவர், மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து, குடும்பத்தில் சொத்து பிரச்சினை தொடர்பாக சிக்கல் ஏற்படவே, அவரது இரண்டாவது மனைவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடுவராக இருந்து நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கும் அந்நிகழ்ச்சியில், நாகப்பன், தன்னுடைய மகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. இதைப் பார்த்த நாகப்பன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது குறித்து அவரது மகள் கூறியதாவது, “அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப மாட்டார்கள் என்று வாக்குறிதி கொடுத்தனர். ஆனால், அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், லட்‌சுமி ராமகிருஷ்ணனும், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் லாபத்திற்காக அந்நிகழ்ச்சியை வெளியிட்டு எனது அப்பாவை தற்கொலை செய்ய தூண்டி உள்ளனர். எனது அப்பாவின் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம்” என்று அழுதுக் கொண்டே கூறினார். மேலும், காவல்நிலையத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது அவர் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, புகார் கொடுத்த ராதிகா, அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனை அவரது மனைவி அம்பிகா, மகள் ரேணுகா ஆகியோர்தான் அதிகமாக, அசிங்கமாக திட்டினார்கள். வீட்டில் இரண்டு மகள்களுக்கு செக்ஸ் தொந்தவு கொடுத்தார் என்று அவரது குடும்பத்தினர்தான் கூறினார்கள். எங்களுடைய டூயூட்டி போலீசுக்கு தகவல் கொடுப்பதும், குழந்தைகள் அமைப்பிடம் சொல்வதும் தான். நான் இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலி கதறுகிறாள் கல்லறையை உடையுங்கள்