Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்னத்திரை ஹூட்டிங் நடத்துவது குறித்து நடிகை குஷ்பு அமைச்சரிடம் கோரிக்கை

Advertiesment
சின்னத்திரை ஹூட்டிங் நடத்துவது குறித்து நடிகை குஷ்பு  அமைச்சரிடம் கோரிக்கை
, திங்கள், 4 மே 2020 (15:52 IST)
தமிழகத்தில் நேற்று ( மே 3 )மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 2,757இல் இருந்து 3,023 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 1,379 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பெரியதிரையில் பணியைத் தொடர அனுமதிக்க வேண்டுமென செல்வமணி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று சின்னத்திரை பணியை தொடங்க அனுமதி கோரி நடிகை குஷ்பு மற்றும் சுஜாதா விஜயகுமார் அமைச்சர் செல்லூரி ராஜூவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது ?
 
எப்போது வேலை ஆரம்பிக்க வேண்டும், வேலையை ஆரம்பித்தால் தான் ஒரு தீர்வு கிடைக்கும். வேலை ஆரம்பித்த பின் ஹூட்டிங் தொடங்கிய பின் என்னென்ன சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து வேண்டுகோள் வைத்துள்ளோம். அவர் முதலமைச்சரை சந்தித்து விட்டு எங்களுக்கு பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.
 
சுஜாதா விஜய்குமார் கூறியதாவது, சிலர் எங்களைச் சந்தித்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறியுள்ளனர். எனவே, சமூக இடைவெளியை கடைபிடித்து ஷூட்டிங்கை மேற்கொள்வது குறித்தும், குறைந்த நபர்களைக் கொண்டு, தொழிலாளர்களின் நலனுக்காகத்தான் அமைச்சரிடம் இதுபற்றி கூறியுள்ளோம். இன்று மாலைக்குள் ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்ப்பார்கிறோம் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்டபத்தை தரமடியாது என்ற தவறான தகவல் பரவுகிறது..? ரஜினி தரப்பு விளக்கம் !