Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவரும் இப்படித்தானா? நான் கூட சிவப்பு சிந்தனையாளர்னு நினைச்சேன்! கரு.பழனியப்பனை கலாய்த்த கஸ்தூரி!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (17:09 IST)
திமுக - விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கரு.பழனியப்பனை கலாய்த்து பிரபல நடிகை கஸ்தூரி ட்விட் செய்துள்ளார்.
 
திரைப்பட இயக்குனரும் சமூக ஆர்வலருமான கரு. பழனியப்பன் பொது நிகழ்ச்சிகளில் தீவிரமான அரசியல் கருத்துகளை எடுத்துவைப்பவர். இவர் நேற்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக அதிரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தார். 
 
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும். சு.வெங்கடேசனுக்கு என்பவருக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'கலைஞர்களின் சங்கமம்' என்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. 
 
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் ஆளும் அதிமுக ஆட்சியின் அவலங்களையும், பாஜகவையும் கடுமையாக சுட்டிக்காட்டி கிண்டலாக பேசிய கரு பழனியப்பனின் பேச்சுக்கு மக்களிடம் அப்ளாஸ் அள்ளியது.  மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி என்று சொன்னாலே மக்கள் சிரிக்கிறார்கள். தமிழக முதல்வர் பதவி இப்படி சிரிப்பாய் சிரிப்பது இதுவே முதல்முறை என்று கூறி நக்கலடித்து திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது   அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது.
 
இந்த நிலையில் தற்போது கரு.பழனியப்பன் குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்,  சு.வெ க்கு  மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல.குடும்ப  டிவில  ஒரு ப்ரோக்ராம் பார்சல் ! என்று கூறி கிண்டலாக பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவிற்கும் டுவிட்டர் வாசிகள் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்களை மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments