நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என பேசுவதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுப்பிய நீதிபதி, தன்னை கற்றவர், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்பவர் இவ்வாறு எப்படி பேசலாம் என்றும் தெரிவித்தார்.
கஸ்தூரி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தான் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் தலைமுறைவாக உள்ள கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கஸ்தூரி பேசிய காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்ட தாகவும், முன் ஜாமின் வழங்க அரசு தரப்பில் காட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்றே கூறப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் கஸ்தூரி முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.