நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

Mahendran
வியாழன், 14 நவம்பர் 2024 (11:02 IST)
நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் கைதாக வாய்ப்பு என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் அவர் கைது வாய்ப்பிருப்பதாக புறப்பட்ட நிலையில், முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணை முடிந்த நிலையில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
 
இதனை அடுத்து, நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்.. சென்னையில் 3 நாட்களுக்கு பின் வெயில்..!

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தை பரிதாப பலி..!

சென்னையின் முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. அதிகாலையில் பரபரப்பு..!

குரூப் 2, 2ஏ காலியிடங்கள் அதிகரிப்பு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

ஷேக் ஹசீனா அறிக்கைகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments