Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திருக்குறள் ’இப்போது ’ நான்காம் பாலில் ’சேர்கிறது...நல்ல விசயம் தானே - கஸ்தூரி டுவீட்

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (20:57 IST)
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது  திருக்குறளோடு துவங்கும்  என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரையில் திருக்குறள் அச்சிடப்படும். அதற்காக முதல்வரிடம் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் அவர்  தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று ,அவர், பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் படமும் இடம்பெற பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து  பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ’அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது  திருக்குறளோடு துவங்கும் .  டிவி , FM ரேடியோவில்  தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான்  திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி  குறள் வருவது நல்ல விஷயம்தான் ’என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments