Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக-வினர் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா, தேர்தல் ஆணையர் மாற்றம் ?- ஸ்டாலின் கேள்வி !

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (20:38 IST)
தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ். பழனிசாமியை மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது!
 
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?  
 
மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?  இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments