Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் - காதல் சந்தியா பகீர் தகவல்

Advertiesment
நானும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் - காதல் சந்தியா பகீர் தகவல்
, வியாழன், 2 மார்ச் 2017 (11:43 IST)
தான் பரபரப்பாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக காதல் சந்தியா பேட்டியளித்துள்ளார்.


 

 
சமீபத்தில் நடிகை பாவனா மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளி பல்சர் சுனி உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
அதே கும்பல் நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மாவையும் கடத்த முயன்றது தெரிய வந்தது. அதேபோல், நடிகை வரலட்சுமி, பிரபல தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் தனக்கு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை கூறியிருந்தார்.
 
இந்நிலையில் நடிகை காதல் சந்தியா இதுபற்றி கருத்து தெரிவித்த போது “ பாவனா எனது நெருங்கிய தோழி. அவர் மிகவும் தைரியமானவர். அவரது தைரியம்தான், அவர் மீதான பாலியல் கொடுமை பற்றி போலீசாரிடம் புகார் கொடுக்க வைத்துள்ளது. அவரது துணிச்சலை நினைத்தால் எனக்கு பெருமாக உள்ளது. அதில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவர் விரைவில் விடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

webdunia

 

 
நானும் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். ஆனால், போலீசில் புகார் செய்ய எனக்கு தைரியம் இல்லை. எனவே, யாரிடமும் இதுபற்றி கூறாமல் இருந்து விட்டேன். ஆனால், பாவனா தைரியமாக போலீசாரிடம் புகார் செய்துள்ளார்” என அவர் பேசியுள்ளார்.
 
காதல் சந்தியா திருமணமாகி, கணவர் மற்றும் குழந்தையுடன் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு டிவி தவிர வேறு எதுவும் கொடுக்கவில்லை: டி.ஜி. தகவல்