Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதனால்தான் கமலை விட்டு பிரிந்தேன் - கவுதமி ஓபன் டாக்

இதனால்தான் கமலை விட்டு பிரிந்தேன் - கவுதமி ஓபன் டாக்

Advertiesment
இதனால்தான் கமலை விட்டு பிரிந்தேன்  - கவுதமி ஓபன் டாக்
, புதன், 2 நவம்பர் 2016 (12:11 IST)
நடிகர் கமல்ஹாசன் உடனான உறவிலிருந்து பிரிந்து விட்டதாக நடிகை கவுதமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.


 

 
கமல்ஹாசன் உடனான 13 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். 
 
கமல்ஹாசனுடன் 13 வருட வாழ்க்கைக்கு பிறகு இந்த பிரிவு எனக்கு நெஞ்சை உடைக்கும் சம்பவமாக இருக்கிறது. எனக்கும், அவருக்கும் உள்ள வாழ்க்கை எண்ணங்கள் வேறுபடுவதால், இருவரும் அனுசரித்து போக வேண்டும் அல்லது அவரவர்கள் பாதையில் பயணிக்க வேண்டும். இதை நான் கடந்த இரண்டு வருடங்களாக யோசித்து வந்தேன். பின்னர் இந்த முடிவெடுத்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் ஒரு வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “நான் துன்பங்களை சகித்துக் கொண்டு வாழ்கிறேன் என்பதற்காக என் மகளும் அப்படியே வாழ வேண்டும் என்று அவசியம் இல்லையே?. அவள் விரும்பும் படி தனித்தன்மையோடு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் எனபது அவள் உரிமை. ஒரு தாயாக, அதை அமைத்துக் கொடுப்பது என் கடமை. நான் மட்டுமில்லை. என் குடும்பத்தினரும் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுதமி.. நீ தூரமாகி விட்டாய் - கமல்ஹாசன் அறிக்கை