Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயன்போடு கூடிய அன்பும் ஆதரவும் வேண்டும் : ஜெயலலிதாவிற்கு நடிகர் சங்கம் வேண்டுகோள்

தாயன்போடு கூடிய அன்பும் ஆதரவும் வேண்டும் : ஜெயலலிதாவிற்கு நடிகர் சங்கம் வேண்டுகோள்

Advertiesment
Jayalalitha
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (11:57 IST)
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குணமடைய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


 

 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இயற்கை நமக்கு தந்த வரம்! தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்!…
 
உடல் நலனையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை தாழ்மையுடன் குவிக்கிறோம்!
 
விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திகிறோம்! வருங்காலங்களில் தாயன்போடு கூடிய தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'அணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம்': பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் மிரட்டல்