சினிமாவிலும் மக்களுக்கான சமுதாயக் கருத்துகளைக் கொண்டுசெல்லும் ஆயுதமாகப் கையாண்டு, அப்துல்கலாமின் சிந்தனைகளை இளைஞர்களிடமும், இயற்கையை காப்பாற்றும் விதமாக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு சேவை செய்தவர் நடிகர் விவேக். இந்நிலையில் தற்போது , சென்னை விருகம்பாக்கத்தில் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சமீபத்தில் நடிகர் விவேக் அளித்த கடைசிப் பேட்டியில் தனது மூத்த மகளின் திருமணம் குறித்துப் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
எனது மூத்த மகள் அமிர்தநந்தினி ஆர்க்கிடெக்ட்டாக உள்ளார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறோம். அவருக்கும் என் இளைய மகள் தேஜஸ்வினிக்கும் சினிமாவில் நாட்டமில்லை என்று வெளிப்படையாகத் தெரித்தார்.
தன் மகளின் திருமணத்தை நடத்திப்பார்க்க கனவுடன் இருந்த அவரை இன்று காலன் பறித்துச் சென்றுவிட்டது அவரது குடும்பத்தாருக்கும் திரைத்துறைக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.