Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கம் மீது ரூ.3 கோடி ஊழல் புகார் : நடிகர் விஷால் கருத்து

ரூ.3 கோடி ஊழல் புகார் : நடிகர் விஷால் கருத்து

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (10:56 IST)
நடிகர் சங்கத்தின் மீது கூறப்பட்ட ஊழல் புகாருக்கு நடிகரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
நடிகர் வாராகி என்பவர் சமீபத்தில் நடிகர் சங்கம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதில் “நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை. முந்தைய நிர்வாகத்தை விட இருமடங்கு ஊழல் அதிகரித்துள்ளது. நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரூ.3 கோடி ஊழல் நடந்துள்ளது. போட்டியை ஒளிபரப்பிய சன் டிவி ரூ.13 கோடி கொடுத்ததாக கூறினார்கள். தற்போது 7 கோடிதான் தந்ததாக பொய்க்கணக்கு எழுதியுள்ளனர்” என்று கூறியிருந்தார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவித்த விஷால் “நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை. முந்தைய சங்க உறுப்பினர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. அதுபோல் ஆதாரத்தை வைத்துக் கொண்டு பேச வேண்டும். அதைவிட்டு விட்டு, தேவையில்லாமல் சிலர் பொய்யான தகவல்களை கூறிவருகின்றனர். வாராகி என்பவர் எந்த படத்தில் நடித்தவர் என்று கூட எனக்கு தெரியவில்லை. 
 
நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட கணக்குகள் அலுவலகத்தில் இருக்கிறது. அதை எந்த நடிகர் வேண்டுமானும் வந்து பார்க்கலாம். நேரில் வந்து பேசினால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். இன்னும் 10 நாட்களில் நடிகர் சங்கம் சார்பில் பல தகவல்களை வெளியிட இருக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments