Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் ஜீப்பை இடித்த அருண்விஜய் : சுவாதி ஆவிதான் காரணமா?

போலீஸ் ஜீப்பை இடித்த அருண்விஜய் : சுவாதி ஆவிதான் காரணமா?

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (10:33 IST)
நடிகர் அருண்விஜய் மதுபோதையில் காரை ஓட்டி போலீசார் ஜீப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதற்கு சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவிதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கதை கட்டி வருகின்றனர்.


 

 
சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண்விஜய் மது போதையில் காரை ஓட்டி போலீசார் வாகனத்தில் மோதினார். இதையடுத்து போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், அருண்விஜய் இடித்த போலீசார் வாகனம்,  சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை அழைத்து சென்ற வாகனம் என்றும், அருண் விஜயின் உடலுக்குள் புகுந்த சுவாதியின் ஆவி, போலீசாரின் வாகனத்தை இடிக்க செய்ததாகவும் சிலர் சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
 
சுவாதி வழக்கை மக்கள் நினைவில் வைத்திருக்கத்தான், ஆவி அப்படி செய்ததாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.
 
ஏற்கனவே சுவாதியின் ஆவி சுற்றி வருவதாக சிலர் கூறி வருகின்றனர். ஆவி அமுதன் என்பவர், சுவாதி ஆவியிடம் பேசியதாகவும், அமாவாசைக்கு பின் கொலையாளிகளை பழிதீர்க்கப்போவதாகவும் தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில் இப்படி ஒரு வதந்தியை சிலர் பரப்பிவிட்டுள்ளனர்.
 
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments