திரைப்பட நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க உள்ளார். விக்ரமின் மாப்பிள்ளையாகப் போகிறார் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்.
நடிகர் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இதில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விக்ரமுக்கு மருமகனாக வர இருப்பவர் கவின்கேர் ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரனும், கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரனும் ஆவார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை 10-ஆம் தேதி சென்னையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் எனவும், இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.