உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க நடிகர் விஜய் மருத்துவமனை நேரில் சென்றார்.
	
 
									
										
								
																	
	
	 
	திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 5 நாட்களாகவே சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல் நிலை திடீரென மோசமடைந்தது. எனவே, ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதியின் உடல்நிலை சீரானது.
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	மேலும், நேற்று காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்து கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது வெளியான கருணாநிதியின் புகைப்படம் திமுக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, அவர் நலமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களுக்கு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனை சென்று கருணாநிதியை சந்தித்தார்.  அவர் நலமாக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
	 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில், நடிகர் விஜய் இன்று காலை காவேரி மருத்துவமனை சென்றார். அதன் பின் அவரது உடல் நலம் விசாரித்து விட்டு மருத்துவமனையின் பின் வாசல் வழியாக அவர் சென்று விட்டார்.