Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஓபிஎஸுக்கு ஆதரவு?: போலீஸ் புகாரால் பரபரப்பு!

நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஓபிஎஸுக்கு ஆதரவு?: போலீஸ் புகாரால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (15:48 IST)
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைபட்டு நிற்கிறது. இதனை சுற்றியே தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு வட்டத்தை பெரிதாக்கி மக்கள் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறது.


 
 
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய போது அதிமுகவில் உள்ள சில நடிகர்கள், மற்ற சில இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோர் ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் ஓபிஎஸுக்கு ஆதரவு வழங்கியதாக வதந்தி பரவியது.
 
நடிகர் கமல் ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின்னர் நடிகர் விஜயும் ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா, திரிஷாவும் உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் அந்த நடிகர், நடிகைகள் யாரும் தங்கள் ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை எனவும் இது வதந்தி எனவும் தெரியவந்துள்ளது. சிலர் போலியாக அந்த நடிகர், நடிகைகள் பெயரில் சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்கி இப்படி பொய் தகவலை பரப்பியுள்ளனர்.
 
இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இது தொடர்பாக நடிகைகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ஆனால் எந்த நடிகை புகார் கொடுத்தது என்ற விபரம் வெளியாகவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

அடுத்த கட்டுரையில்
Show comments