Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலங்குகளுக்கு தனி மேம்பாலமா? அதிர்ச்சியளிக்கும் நாடுகள்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (15:41 IST)
காடுகளை அழித்து சாலைகள் அமைக்கும் நாடுகள், விலங்குகள் கடந்து செல்ல தனி மேம்பாலம், சுரங்கப் பாதை என அனைத்தும் செய்து வைத்துள்ளனர்.


 

 
1950 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு முதன்முதலாக விலங்குகளுக்கு என தனிவழி அமைத்தது. அதைத் தொடர்ந்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் விலங்குகளுக்கு குகைகள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் அமைத்துள்ளனர். இதுபோன்று விலங்குகளுக்கு என தனிப்பாதை அமைப்பதை Ecoduct  என அழைத்து வருகின்றனர். 
 
அனைத்து நாடுகளிலும் பெரும்பாலான நெடுங்சாலைகள் காடுகளை அழித்துதான் அமைக்கப்படுகிறது. இதனால் காட்டில் உள்ள விலங்குகள் பெரிதும் பாதிப்படைகிறது. தமிழகத்தில் கோவை நகரம் வடக்கு நோக்கி நீண்டு செல்கிறது. காடுகள் இருந்த பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக நகரமாக உருவெடுத்து வருகின்றனர். 
 
இதனால் காட்டில் வாழும் விலங்குகள் ஊருக்குள் வர தொடங்கிவிட்டது. இதைத்தடுக்க இந்தியாவில் எந்த முன்னெற்பாடு திட்டங்களும் இல்லை. இந்த உலகத்தில் மனிதன் மட்டும் உயிர் வாழவில்லை என்பதையும் மனிதன் உயிர் வாழ விலங்குகளும் உயிர் வாழ வேண்டும் என்பதையும் சுற்றுச்சூழல் உணர்த்துவதை அறியாமல் இயற்கைக்கு எதிரான செயல்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறோம்.
 
அமெரிக்க மெத்தனமாக தொடங்கினாலும் கடந்த 30 ஆண்டுகளில் விலங்குகளுக்காக அதிக அளவில் குகைகள், சுரங்கப்பாதை என அமைத்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் மட்டும் விலங்குகளுக்கு 600க்கும் மேற்பட்ட குகைவழிகள் இருக்கின்றன.
 
அழிந்துவரும் பல விலங்குகள் இனங்களை காப்பாற்றி பாதுகாப்பான இந்த வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சர்வதேச விலங்குகள் நல அமைப்புகள் பாராட்டியுள்ளன. நெடுஞ்சாலை, ரயில்பாதை, என பல இடையூறுகளை கடந்து 800மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலே மிகப்பெரிய Ecoduct இங்குதான் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments