ஓபிஎஸ், எடப்பாடியாரை வெளுத்து வாங்கிய செந்தில்

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (18:00 IST)
வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்று பெற்று வாருங்கள். உங்களை முதல்வராக ஏற்றுக் கொள்கிறோம் என ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் செந்தில் சவால் விட்டார்.


 

 
அதிமுகவின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நேற்று நடிகர் செந்தில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை வெளுத்து வாங்கினார். அவர் கூறியதாவது:-
 
அதிமுகவை ஜெயலலிதா மிக கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள். அவரது மறைவுக்கு பிறகு யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைத்தார் சசிகலா. சில சகுனிகள் இந்த கட்சியை கோமா ஸ்டேஜில் கொண்டு வந்துவிட்டார்கள். அதற்கு நல்ல டாக்டர் தேவை. அந்த டாக்டர் தினகரன்தான்.
 
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தினகரன் கூறினார். சேவல் சின்னத்துக்காக திருச்சி ஒத்தக்கடையில் பேசும்போது மேடையில் ஓபிஎஸ், எடப்படி பழனிச்சாமி என யாரும் இல்லை. நேத்து வந்தவன் சொல்லியிருக்கான் செந்திலுக்கு பதவியான்னு. 
 
ஒன்றுமையாக இருந்தால் கட்சி நன்றாக இருக்கும். இந்த கட்சி இரண்டு பேரால் வீணாகிறது. வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா நீங்க இரண்டு பேரும் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாருங்கள். நாங்கள் உங்களை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறோம் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments