காவிரி விவகாரத்தை தீர்த்து வைப்பது நடிகர்களின் வேலை அல்ல.. சரத்குமார்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (15:11 IST)
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை என ஒரு சில அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக  நடிகர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது காவிரி பிரச்சனையை நடிகர்கள் தீர்த்து வைக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஒரு நடிகனுக்கு அழுத்தம் தர வேண்டாம் என்றும் அரசு கவனத்தில் கொள்ளாத நிலை ஏற்பட்டு போராட்டம் எழுந்தால் மக்களுக்காக ஒன்று சேர்ந்து நிற்பேன் என்றும் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் கன்னட நடிகர்கள் கர்நாடக மாநில அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக தமிழ் நடிகர்கள் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் சரத்குமார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments