Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேற லெவல்ல உதவி செய்த நடிகர் சமுத்திரக்கனி

வேற லெவல்ல உதவி செய்த நடிகர் சமுத்திரக்கனி
, வெள்ளி, 23 நவம்பர் 2018 (08:35 IST)
நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கொடுத்த ஜெனரேடரில் மக்கள் தங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு பயன் பெற்று வருகின்றனர்.
 
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவர்களுக்கு தமிழகமெங்குமிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. 
 
சாப்பாடு மிக அத்தியாவசம் தான். இது ஒரு புறம் இருக்க மக்களுக்கு மின்சாரமும் தேவை. ஏனென்றால் மின்சாரம் இல்லாமல் மக்கள் தங்கள் செல்போனுக்கு சார்ஜ் போட முடியவில்லை. செல்போனுக்கு சார்ஜ் போட்டால் தான் தங்கள் ஊருக்கு என்ன தேவைபடுகிறது என்று அவர்களால் வெளி மக்களுக்கு சொல்ல முடியும். இந்த பிரச்சனையால் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
webdunia
 
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கஜாவால் பாதித்த மக்களுக்கு ஜெனரேட்டர் அனுப்பியுள்ளார். இதனை வைத்து மக்கள் தங்கள் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக் கொண்டனர். மேலும் சமுத்திரக்கனிக்கு மனமார தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜா புயலுக்காக செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி செய்த வேலை: கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்