Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகன் திடீர் மரணம்....

Webdunia
திங்கள், 14 மே 2018 (17:35 IST)
பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகன் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் மரணமடைந்தார்.

 
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவிச்சந்திரன். அதன் பின் அவர் பல படங்களில் நடித்தார். சற்று வயதான பின் ஊமை விழிகள் படத்தில் வில்லனாக நடித்து அவர் மிரட்டியிருந்தார். அதன் பின்பு சில படங்களில் நடித்த அவர் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். 
 
இவருக்கு பாலாஜி, அம்சவர்தன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் ஹம்சவர்தன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரின் அண்ணன் பாலாஜி(50) தொழில் செய்து வந்தார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார்.

 
அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments