Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சேனல் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்?

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (07:18 IST)
இன்றைய நிலையில் அரசியல் கட்சி என்று இருந்தால் அக்கட்சிக்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இருந்தால் மட்டுமே அக்கட்சியின் கொள்கைகள், செய்திகள் மக்களை சென்றடைவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு சேனலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் சேனல் இல்லாத கட்சிகளின் நிகழ்வுகள் கூட மக்களை சென்றடைவதில்லை

இந்த நிலையில் விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'மக்கள் மன்றம்' என்ற பெயரில் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு ரங்கராஜ் பாண்டே பொறுப்பு வகிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த செய்தியை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

இருப்பினும் ரஜினிகாந்த் புதியதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாகவும், ரஜினி மக்கள் மன்றம் பெயா் வெளியான லெட்டா் பேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினியே விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments