ஒரு அரசியல் கட்சியில் இணைய தனக்கு ரூ.100 கொடி கொடுப்பதாக அந்த கட்சியின் தலைவர் தன்னை அணுகியதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் ‘சினிமாயணம்’ என்கிற தலைப்பில் பேசிய போது கூறியதாவது:
என்னிடம் 60 கதைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் எடுக்க ரூ.600 கோடி வேண்டும். இதற்கு நான் எங்கே போவேன்? அதேசமயம் இந்த இடத்தில் இன்னொரு விஷ்யத்தை பகிர விரும்புகிறேன்.
ஒரு அரசியல் கட்சி தலைவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். எங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள் என்றார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் தெரியாது. எனவே, அதில் விருப்பமில்லை. ஆனால், அரசியல் பேசுவேன்.
இப்போது ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லையே என்று ஆதங்கம் எனக்கு உண்டு. காமராஜரை போல, ஒரு கக்கனை போல இனி ஒருவர் வருவது கஷ்டம்” என அவர் பேசினார்.