Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!

Advertiesment
Manzoor Ali Khan

Senthil Velan

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (22:42 IST)
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பலாப்பழம் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மன்சூர் அலிகான், குடியாத்தத்தில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
அதிகளவு உடல் சோர்வுடன் வயிற்று வலி மற்றும் கால் வலியும் அவருக்கு இருந்ததால், டாக்டர்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினார். பின்னர் டாக்டர்கள் ஆலோசனைப்படி மன்சூர் அலிகான், சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் பிரசாரத்தின்போது தனது விஷம் கலந்த பழச்சாறு கொடுத்துவிட்டார்கள் என்று கூறியும் பரபரப்பு ஏற்படுத்தினார். இந்தநிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தொகுதிக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், அதனால் தான் அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் முடிந்ததும், அவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை பெறுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் பங்கேற்பதில் புரட்சியை ஏற்படுத்துங்கள்..!இளைஞர்களுக்கு ராஜீவ் குமார் அழைப்பு...!!