தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திரையுலகினர் பலர், பல அரசியல் கட்சியில் இணைந்தாலும் பிரச்சாரத்தில் ஒருசிலர் மட்டுமே களத்தில் உள்ளனர். அந்த வகையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக்
நேற்று தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடும் தூத்துகுடி தொகுதியில் பிரச்சாரம் செய்த நடிகர் கார்த்திக் தேவைப்பட்டால் துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டு எல்லைக்கு சென்று நாட்டிற்காக போராடுவேன் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
நான் பைலட் ஆகி ராணுவத்தில் சேர வேண்டும் எனறுதான் முதலில் ஆசைப்பட்டேன். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ) பயிற்சி பெறவும் முயற்சித்தேன். ஆனால் விதிவசத்தால் நடிகராகிவிட்டேன். இருப்பினும் இன்று அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளேன். இருப்பினும் இந்த வயதிலும் நாட்டுக்கு தேவை என்றால் துப்பாக்கியுடன் எல்லையில் போய் நான் நிற்பேன் என்று கூறினார்.
மேலும் இந்த கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது சரியான முடிவை தான் எடுத்து உள்ளேன் என்பது தெரிகிறது. ராணுவம் எப்படி எல்லையில் நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ அது போன்று காவல்துறை, உளவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தராஜன் என்பது நல்ல பெயர் மட்டுமல்ல நல்ல பெண்மணி, தேசத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தாமரைக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு நடிகர் கார்த்திக் பேசினார்