Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன தைரியம்?.. இது வெட்கக்கேடானது - பொங்கி எழுந்த கமல்ஹாசன்..

Advertiesment
, வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (18:32 IST)
காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தியதற்கு நடிகர் கமல்ஹாசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் மீது சில இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

webdunia

 

 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ இந்தியாவை ஒருங்கிணையுங்கள். எனது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வெட்கப்பட வேண்டும். வீரத்தின் உச்சம்தான் அஹிம்சை. தாக்கியவர்களை திருப்பி தாக்காமல் அமைதி காத்த ராணுவ வீரர்கள் தேசத்திற்கே உதாரணமாக திகழ்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயபாஸ்கர் பதவி நீக்கம்? அமைச்சரவையில் மாற்றம்? - தினகரன் அதிரடி பேட்டி