இன்று புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசன்

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (07:18 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார்.
மேலும், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன்,மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி, நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து பேசினார்.
 
கமல் இன்று கட்சி துவங்குவதை முன்னிட்டு, மதுரையில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இன்று காலை 7:45 மணிக்கு அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் துவக்குகிறார். 
 
பின் ராமநாதபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இறுதியாக மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாலையில் தன் கட்சி கொடியை ஏற்றி வைத்து  கட்சியின் பெயரையும் அறிவிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments