Publish Date: Tue, 29 Nov 2016 (15:28 IST)
Updated Date: Tue, 29 Nov 2016 (15:31 IST)
நடிகர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுமையால் அண்மைக்காலமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று சோவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைகாக சோ சேர்க்கப்பட்டிருக்கிறார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் முதல்வர் ஜெயலலிதா 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.