Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியை தாக்கிய வழக்கு - நடிகர் பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

மனைவியை தாக்கிய வழக்கு - நடிகர் பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
, செவ்வாய், 4 ஜூலை 2017 (14:29 IST)
நடிகர் பாலாஜி மீது, அவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் மாதாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவருமான நடிகர் தாடி பாலாஜி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது.  
 
அந்நிலையில் கடந்த மே மாதம் நித்யா தனது கணவர் தாடி பாலாஜி மீது மாதவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பாலாஜி தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் தொடர்பாக இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து ஆலோசனை வழங்கினர். அப்போது, ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து தன்னை ஏமாற்றி பாலாஜி திருமணம் செய்து கொண்டார் என்பது உட்பட பல புகார்களை நித்யா கூறினார். அதற்கு பாலாஜி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும், இருவரையும் ஒன்று சேர்க்க போலீசார் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
 
இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்யா, கடந்த 1ம் தேதி தனது கணவர் பாலாஜி மீது மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “தனது கணவர் பாலாஜி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, சாதி பெயர் சொல்லி என்னை இழிவுபடுத்தி பேசியும், என்னை பல முறை அடித்தும் கடுமையான தொல்லை கொடுத்து வந்தார். மேலும், பல ஆண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி என்னை சித்ரவதை செய்து வந்தார். அவர் மீது ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
எனவே, கமிஷனரின் உத்தரவின் பேரில் மாதாவரம் போலிசார் பாலாஜி மீது பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல் மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இதையடுத்து, பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பட்டமான பொய்யை அவையில் அவிழ்த்து விட்ட எடப்பாடி: ஸ்டாலின் காட்டம்!