Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்: திரைத்துறையினர் அதிர்ச்சி!!!

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (17:17 IST)
நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் திடீர் மாரடைப்பால் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ்(46) திமுக சார்பில் 2009ல் ராமநாதபுரம் எம்.பியாக இருந்துள்ளார்.  திமுகவில் இருந்த அவர் 2014ல் அதிமுகவில் இணைந்தார். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில்  நடித்திருந்தார். திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய பதவி பகித்து வந்தார். தேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
 
இந்நிலையில் இன்று மதியம் அவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இந்த திடீர் மறைவு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments