Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை; கடமையை செய்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (19:13 IST)
பொள்ளாச்சி பாலீயல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 
 
பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணின் தகவலை வெளிப்படுத்திய, காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தவறு. இந்த நடவடிக்கையால், அந்தப் பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். இதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.
 
மேலும், பலாத்காரம் தொடர்பாக, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே வெளியாகியுள்ளதாகவும், இதில் அரசியல் தொடர்பு இல்லை என்றும் உடனடியாக விசாரணை நடத்தாமல் அறிவித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக, அடையாளங்களை வெளியிட்ட, கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்