Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் - ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (17:32 IST)
கொரொனா தாக்கத்தால் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏற்கனவே வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், வீட்டில் உள்ள சிறுவர்கள் பொழுது போகாமல் பட்டம் செய்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவர்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சிலநாட்களாக பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பட்டம் விட்டு விளையாடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர்மட்ட மின்பாதையில் சிக்கி பெரும் பிரச்சனை ஏற்படுத்திவிடும்.அதனால் மின் தடை ஏற்படும் மின்சார வாரியத்துக்கும் பெரும் சிக்கலாகி விடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சாலையில் செல்லும் பொதுமக்களின் மீது பட்டத்தின் கயிறு சிக்கி பெரும் ஆபத்து ஏற்படுத்திவிடும் என்பதால் பட்டம் விடுவதைக் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை மூறி பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments