Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

J.Durai

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:12 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது.
 
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
 
அப்போது அமைச்சரின் வருகைக்காக சாலை மற்றும் ஏரிக்கரை ஓரங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
 
ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவு போன்ற பவுடர் கொட்டப்பட்டது.
 
மழைக்காலங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் கிருமிகளை அழிக்கும் நோக்கில் ப்ளீச்சிங் பவுடர் சுகாதாரமற்ற இடங்களில் கொட்டப்பட்டு வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஏற்பாட்டின்  பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ஆனால் தற்போது அமைச்சரின் வருகையின் ஏற்பாட்டின் போது ஏரிக்கரை ஓரங்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற பவுடர் கொட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திணறினர். 
 
மேலும் முறையாக ஆய்வு செய்து அது ப்ளீச்சிங்
பவுடர் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
 
பிளிசிங் பவுடருக்கு பதில் விலை குறைவான வெள்ளை நிற பவுடரை தாம்பரம் மாநகராட்சி சுகாதரத்துறை அதிகாரி பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....