சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் ரயில்கள் என்பதும் இந்த ரயில்கள் காரணமாக புறநகர் பகுதி மக்கள் சென்னை நகருக்குள் போக்குவரத்து இடையூறு இன்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
குறைந்த கட்டணத்தில் ஏழைகளும் பயன்படுத்தும் வகையில் உள்ள இந்த மின்சார ரயில்களில் ஏற்கனவே முதல் வகுப்பு பெட்டிகள் இருக்கும் நிலையில் தற்போது ஏசி பெட்டிகள் இணைக்க தென்னக ரயில்வே சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
முதல்கட்டமாக கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயிலுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது