Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து ...வெட்கக்கேடானது - ஸ்டாலின் தாக்கு

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (14:46 IST)
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டியது தொடர்பாக வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர்  பார் நாகராஜனை போலிஸார் விடுவித்தனர். 
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீது கோவை ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை தற்போது ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
நீதிமன்றத்தின் இந்த முடிவு அனைத்துத்  தரப்பினருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘குண்டர்சட்டத்தில் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்று ஏற்கனவே நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.அந்த தீர்ப்புகளை எல்லாம் முற்றிலும் புறக்கணித்து  இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளிகளை தப்ப விட வேண்டும் என  உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது.
 
இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என  வலியுறித்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்